×

10ம் வகுப்பு மாணவனுக்கு மதுபாட்டில் குத்து: சக மாணவன் கைது

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 13ம் தேதி பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது, அவருடன் 10ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவர் மோட்டார் சைக்கிளில் சைக்கிள் மீது மோதுவது போல் வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கட்டுமாவடி ரோடு ரயில்வே கேட் அருகில் பைக்கில் வந்த மாணவன், சைக்கிள் மாணவனை, மது பாட்டிலால் சரமாரி குத்தினார். இதில் மாணவனின் மூக்கு மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது.

இதைபார்த்த அப்பகுதியினர் காயமடைந்த மாணவனை அறந்தாங்கி அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து காயமடைந்த மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து பாட்டிலால் குத்திய மாணவனை கைது செய்து புதுக்கோட்டை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தஞ்சை குழந்தைகள் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

 

The post 10ம் வகுப்பு மாணவனுக்கு மதுபாட்டில் குத்து: சக மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Arantangi ,Arantangi Government School ,Pudukottai ,
× RELATED அறந்தாங்கி சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்