×

மேகதாது அணை கட்ட மாநிலஅரசு குழு அமைப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்களை அமைத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வரின் அறிவிப்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரியில் நீரை தடுத்து, ரூ.9,000 கோடி செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டவும் 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது என வைகோ தெரிவித்தார்.

The post மேகதாது அணை கட்ட மாநிலஅரசு குழு அமைப்பு: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : State Govt Committee ,Vaiko ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Karnataka state government ,Meghadatu Dam ,Karnataka ,Chief Minister ,Supreme Court ,Cauvery Tribunal ,Cauvery ,State government committee ,Dinakaran ,
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...