×

விஜய் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது: தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன்: நடிகர் சமுத்திரக்கனி பேட்டி

தென்காசி: விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ள காரணத்தால் தான் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் அறிவித்து இருந்தார். விஜய் அரசியல் வருவது குறித்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ், காளிதாஸ் ஜெயராம், சனம் ஷெட்டி, வாணிபோஜன், சதிஷ், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜய் அரசியலுக்கு வந்ததை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறார். அதனை சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வருவது பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன். அவர் கூப்பிட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. நல்ல விஷயங்களுக்கு நான் எப்போதுமே கூட நிற்பேன்” எனவும் நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளர்.

The post விஜய் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது: தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன்: நடிகர் சமுத்திரக்கனி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Samudrakhani ,TENKASI ,VIJAY TAMIL VICTORY CLUB ,2026 ASSEMBLY ELECTIONS ,Samudrakani ,Dinakaran ,
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...