×

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

சென்னை: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,465 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கனஅடியில் 761 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.15 அடியாக உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 45 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal Lake ,Cholavaram Lake ,
× RELATED சென்னையின் குடிநீர் ஆதாரமாக...