×

நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தைகளுடன் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு;

* நேரடியாக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை.

* மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று வனக்காப்பாளரிடமே அனுமதி பெற்று செல்லலாம்.

* நாள் ஒன்றிற்கு 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* இருசக்கர வாகனம், வேன், திறந்த வெளி வாகனம் போன்ற வாகனங்களின் பயணத்திற்கு அனுமதி இல்லை.
முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் 10 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* காலை 8.00 மணி முதல் சென்று மாலை 5.00 மணிக்குள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வனவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், காக்காச்சி புல் வெளிப்பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

* சுற்றுலா பயணிகள் பயணத்தின் போது தடைச்செய்யப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலீதின் பைகள் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

*மணிமுத்தாறு வனச்சோதனை சாவடிக்கு நேரில் சென்று அனுமதி பெறும்பட்சத்தில், செல்லும் வாகனத்தின் பதிவுச்சான்று நகல், வாகன காப்பீடு நகல், ஆதார் நகல் இவைகளை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.*

* வாகனத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை பொருத்தே நபர்கள் அனுமதிக்கப்படும்.

*மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் அனுமதி பெற்று நுழைவு கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று பின் செல்ல வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Forestry Department ,Nella District Manchole ,Nella ,Forest Department ,Manchole ,Nella district ,West Continuation Mountain ,Deputy Director ,Ambasamutram ,Neleli District Manchole ,Dinakaran ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது