×

உழவர் பாதுகாப்பு திட்ட பதிவிற்கு விஏஓவை அணுகலாம்

 

ஊட்டி, பிப்.16: முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட உள்ளதால் சம்பந்தப்பட்ட விஏஒவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்-2011 திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்ப தலைவர்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 712 நபர்களும், அவர்களை சார்ந்துள்ள உறுப்பினர்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 329 நபர்களும் என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 041 நபர்கள் உள்ளனர்.

இவர்களின் விவரங்கள் உரிய கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி நீலகிரியில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சார்ந்தவர்களின் ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய அனைத்து விவரங்களையும் கணினிமயமாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்களாகிய அனைவரும் தங்களுக்குரிய கிராம நிர்வாக அலுவலர்களிடம் நேரிடையாக சென்று அனைத்து விவரங்களையும் வழங்கி பயன்பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post உழவர் பாதுகாப்பு திட்ட பதிவிற்கு விஏஓவை அணுகலாம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Ooty ,Chief Minister ,Collector ,Aruna ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!