×

₹3 லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டும் போலீஸ்காரர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் காட்பாடியில் மருத்துவ செலவு எனக்கூறி

வேலூர், பிப்.16: காட்பாடியில் மருத்துவ செலவு எனக்கூறி ₹3 லட்சம் வாங்கிக்கொண்டு திரும்ப கேட்டால் போலீஸ்காரர் மிரட்டல் விடுப்பதாக எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அணைக்கட்டு அடுத்த மருதவல்லி பாளையத்தை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘வரதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணி புரிவதாகவும், அதிகாரிகள் தனக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும் கூறினார். அவர் எனது உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹1.50 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு அவர் பணி வாங்கித்தராமல் தட்டிக்கழித்து வருகிறார். எனவே பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறியிருந்தார்.

வேலூர் கீழ்மொணவூரை சேர்ந்த பெண் அளித்த மனுவில், ‘என்னிடம் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹1 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் மனையை வாங்கி தரவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திரும்ப தர மறுக்கிறார். எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். காட்பாடி திருநகரை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த மனுவில், `எங்கள் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் அவர்களது தாயின் புற்றுநோய் செலவுக்காக அவசரமாக பணம் கேட்டனர். மருத்துவ செலவு என்பதால் எனது நகைகளை அடகு வைத்து ₹3 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் தட்டிக்கழிக்கின்றனர். மேலும் தங்களுக்கு ஐகோர்ட் வரை ஆட்கள் உள்ளதாகவும் கூறி மிரட்டுகின்றனர். எனவே அவர்களிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்’ என கூறியிருந்தார்.

The post ₹3 லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டும் போலீஸ்காரர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் காட்பாடியில் மருத்துவ செலவு எனக்கூறி appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Vellore ,SP ,Gadbadi ,Marudavalli ,Dinakaran ,
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை