×

சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு ₹3.45 கோடி கல்விக்கடனுதவி கலெக்டர் வழங்கினார் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த

திருவண்ணாமலை, பிப்.16: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கல்விக்கடன் சிறப்பு முகாமில், 63 மாணவர்களுக்கு ₹3.45 லட்சம் கல்விக்கடனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கல்விக்கடன் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு வங்கிகளைச்சேர்ந்த மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கினர்.

கல்விக்கடன் சிறப்பு முகாமில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: கல்வி மட்டும்தான் ஒரு தலைமுறையை முன்னேற்றும். கல்விதான் நம் முன்னேற்றத்துக்கு அடிப்படை. கல்விக் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், ஒருவரின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். இதுபோன்ற முகாம், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. கல்விக் கடனை எதிர்பார்த்து காத்துள்ள மாணவர்களுக்கு, தாமதமின்றி கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த முகாம் அமைந்திருக்கிறது. குறிப்பாக, பல இடங்களில் கல்விக்கடன் அளிக்க மறுக்கின்றனர். எனவே, அந்த சிக்கலை தீர்ப்பதற்காக அனைத்து வங்கிகளும் இணைந்து சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்துகிறது. கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்துகொண்டு, முறையான இணையதளத்தில் பதிவு செய்து கல்விக் கடன் பெற்று மாணவர்கள் பயன்பெறலாம்.
மேலும், கல்வி கடன் பெறும் மாணவர்கள், அதை திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறைக்கு மீண்டும் கல்விக் கடன் வழங்க வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில், 63 மாணவர்களுக்கு, ₹3.45 கோடி மதிப்பிலான கல்விக் கடனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். முகாமில், கூடுதல் கலெக்டர் ரிஷப், டிஆர்ஓ பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் கவுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு ₹3.45 கோடி கல்விக்கடனுதவி கலெக்டர் வழங்கினார் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த appeared first on Dinakaran.

Tags : Collector ,Tiruvannamalai Collector ,Tiruvannamalai ,Bhaskara Pandian ,Tiruvannamalai Collector's Office ,Dinakaran ,
× RELATED திருநங்கைகள், நரிக்குறவர்...