×

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்

 

தஞ்சாவூர், பிப்.16: தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஆபத்தான முறையில் முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். சமீப காலமாக சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சியின் பிளக்ஸ் பேனர்கள் வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மேலே விழுந்து உயிரிழப்புக்கள் மற்றும் படுகாயங்கள் ஏற்படுகிறது.

எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வருகின்றனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க கூடாது. நகராட்சி மாநகராட்சி ஊராட்சி பகுதிகளில் முன அனுமதி பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும் என விதிமுறைகள் இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் முன் அனுமதி பெறாமலேயே ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பொதுமக்கள் அதிகம் சாலையை கடக்கும் பகுதியான தஞ்சை ரயில் நிலையம் முன்பு மாநகராட்சி முன் அனுமதி பெறாமல் மூன்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களையும் அப்புறப்படுத்தினர்.

The post தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,station ,Thanjavur railway station ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...