×

தம்பி திருமணத்திற்கு சென்ற அண்ணன் பஸ் மோதி சாவு உடன் சென்றவரும் பலி

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் பாஸ்கரன் (28), பிரபாகரன் (25). பாஸ்கரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆத்திகுளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பிரபாகரனுக்கு சொந்த ஊரில் நேற்று காலை திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை பாஸ்கரன், ஆத்திகுளத்தை சேர்ந்த கொத்தனார் சுதாகர் (22) ஆகியோர் வேடநத்தத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது இவர்களது டூவீலரும், எதிரே பாறைக்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த டூவீலரும் நேருக்குநேர் மோதின. இதனால் பாஸ்கரன், சுதாகர் ஆகியோர் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது நரிக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை சென்ற அரசு பஸ் இருவர் மீதும் ஏறியது. இதில், பஸ் சக்கரத்தில் சிக்கிய இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு டூவீலரில் வந்த மணிகண்டனுக்கும் காயம் ஏற்பட்டது.

The post தம்பி திருமணத்திற்கு சென்ற அண்ணன் பஸ் மோதி சாவு உடன் சென்றவரும் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Rajendran ,Vedanatham village ,Virudhunagar district ,Bhaskaran ,Prabhakaran ,Attikulam ,
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி