×

தமிழ்நாட்டில் இன்று 3 டிகிரி வெப்ப நிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து வெயில் காலம் தொடங்க உள்ளது. அதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதற்கு மாறாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாள் வறண்ட வானிலை நீடிக்கும். சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையில் அதிகபட்சம் 32 டிகிரியும் குறைந்த பட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும்.

The post தமிழ்நாட்டில் இன்று 3 டிகிரி வெப்ப நிலை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,North East ,Erode ,
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...