×
Saravana Stores

சில்லிபாயிண்ட்…

* ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்துக்கு நிரஞ்சன் ஷா ஸ்டேடியம் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி ரோகித் ஷர்மா தலைமையில் கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலக கோப்பையில் ரோகித் கேப்டனாக செயல்பட உள்ளது உறுதியாகி உள்ளது. தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார்.

* ரஞ்சி கோப்பை எலைட் பிரிவுகளில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. சி பிரிவில் தமிழ்நாடு – பஞ்சாப் மோதும் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. புதுவையில் இமாச்சல் – புதுச்சேரி அணிகள் மோதுகின்றன.

* ஆப்கானிஸ்தானுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் செய்த நிலையில், அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. முதல் டி20 போட்டி தம்புல்லாவில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

* ஆஸி. தொடரில் விளையாடாததால் ஹரிஸ் ராவுப்புக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிளப் அணி வீரர் ரிஸ்வான் ஜாவேத்துக்கு பதினேழரை ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

* டெஸ்ட் போட்டிகளில் கபில் தேவ், அஷ்வினை தொடர்ந்து 3000 ரன் மற்றும் 250 விக்கெட் எடுத்த 3வது இந்திய ஆல் ரவுண்டர் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.

* அறிமுக டெஸ்டில் 2வது அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை (48 பந்து) சர்பராஸ் கான் நேற்று சமன் செய்தார். 1934ல் இந்தியா விளையாடிய முதல் டெஸ்டில் யடவேனத்ராசிங் (பாட்டியாலா இளவரசர்) 42 பந்தில் அரை சதம் அடித்து முதலிடம் வகிக்கிறார். அவர் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டி இது மட்டுமே!

* பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார். ஹாங்காங் வீரர் கோல்மன் வோங்குடன் நேற்று மோதிய நாகல் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Rajkot ,Saurashtra Cricket Association Stadium ,Niranjan Shah Stadium ,ICC World Cup T20 ,Indian team ,Rohit Sharma ,BCCI ,Jay ,Dinakaran ,
× RELATED விதைகளை பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்கள்!