×

தமிழக ஆளுநருக்கு குமாரசாமி கண்டனம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘கர்நாடக மாநில சட்ட பேரவையில் மரபுப்படி ஆளுநர் தாவர்சந்த்கெலாட் உரையாற்றினார். அதே நேரம் சமீபத்தில் தமிழக சட்ட பேரவையில் அந்த மரபினை அம்மாநில ஆளுநர் மீறியுள்ளார்.

அரசின் சாதனைகளை இரண்டு வரிகளை படித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டார். இது மிகவும் துரதிருஷ்டமாகும். அதே நேரம் கர்நாடக ஆளுநர் அது போல் நடந்து கொள்ளாமல் மாநில அரசின் அறிக்கையை படித்து அரசியல் அமைப்பு மரபிற்கு மரியாதை அளித்துள்ளார். இதற்காக ஆளுநருக்கு அனைவரும் நன்றி கூறவேண்டும்’ என்றார்.

The post தமிழக ஆளுநருக்கு குமாரசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,Tamil Nadu ,Governor ,Bengaluru ,Former ,Chief Minister ,Karnataka Legislative Assembly ,Thavarchandkhelat ,Karnataka State Legislative Assembly ,Legislative Assembly of Tamil Nadu ,Governor of Tamil Nadu ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...