×

சதம் விளாசினார் பெடிங்ஹாம் நியூசிலாந்துக்கு 267 ரன் இலக்கு


ஹாமில்டன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து அணிக்கு 267 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செடான் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சில் புதுமுகம் வில்லியம் ஓரூர்கி 4, ரச்சின் 3, ஹென்றி, சவுத்தீ, நீல் வேக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 211 ரன்னுக்கு சுருண்டது.

வில்லியம்சன் 43, லாதம் 40, வில் யங் 36, வேக்னர் 33, ரச்சின் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் டேன் பியட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தென் ஆப்ரிக்கா 31 ரன் முன்னிலையுடன் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. ஓரூர்கி வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் நீல் பிராண்ட் 34, ஜுபேர் ஹம்சா 17, கீகன் பீட்டர்சன் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய டேவிட் பெடிங்ஹாம் சதம் விளாசினார். அவர் 110 ரன் (141 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 235 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

நியூசி. பந்துவீச்சில் ஓரூர்கி 5, பிலிப்ஸ் 2, ஹென்றி, ரச்சின், வேக்னர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசி. 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்துள்ளது. கான்வே 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லாதம் 21 ரன்னுடன் களத்தில் உள்ளார். கை வசம் 9 விக்கெட் இருக்க, நியூசி. வெற்றிக்கு இன்னும் 227 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post சதம் விளாசினார் பெடிங்ஹாம் நியூசிலாந்துக்கு 267 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Bedingham ,New Zealand ,Hamilton ,South Africa ,Sedan Park ,
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...