×

திரிணாமுல் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ராஜினாமா

கொல்கத்தா: புகழ் பெற்ற வங்காள நடிகை மிமி சக்ரவர்த்தி. இவர் கடந்த மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்கம் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்றார். இந்நிலையில் மிமி சக்ரவர்த்தி தன் மக்களவை உறுப்பினர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று மதியம் மேற்குவங்க சட்டப்பேரவைக்கு சென்ற அவர், கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து தன் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மம்தா பானர்ஜி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிமி சக்ரவர்த்தி, “அரசியல் என்பது எனக்கான தேநீர் அல்ல என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து நான் புரிந்து கொண்டேன்” என்றார்.

The post திரிணாமுல் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Mimi Chakraborty ,Kolkata ,Lok Sabha ,Trinamool Congress ,West Bengal ,Jadavpur ,Trinamul ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...