×

லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை: ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று ஒன்றிய அரசிடம் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்ட சபைகளுக்குமான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் ெவளியிட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டே (65) நேற்று ஓய்வு பெற்றார்.

அதனால் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான வேலைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் குறித்து வாக்காளர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பது, வாக்குப்பதிவு நாள் பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு, தேர்தல் பாதுகாப்பு போன்ற பணிகளில் மத்திய ஆயுதக் காவல் படையினரை (சிஏபிஎப்) வீரர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்காக சிஏபிஎப் வீரர்களை நியமிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்திட வசதியாக சுமார் 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவைப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டோரின் பாதுகாப்பு வசதிக்காகவும், பணியாளர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதற்காக ரயில்களில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் ஈடுபடும் பணியாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு படிப்படியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளது.

The post லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை: ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Assembly ,CAPF ,Union ,NEW DELHI ,ELECTORAL COMMISSION ,EU GOVERNMENT ,Andhra ,Arunachala ,State of the ,Dinakaran ,
× RELATED ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!