×

சமூக வலைதளத்தில் பிரபலமாகி கோடீஸ்வரியான 24வயது இளம்பெண்: நடிகர் அக்ஷய் குமாருக்கு சொந்தமான வீட்டை வாங்கி அசத்தல்

மும்பை: சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான இளம்பெண் ஒருவர் மும்பையில் பாலிவுட் நடிகருக்கு சொந்தமான வீட்டை வாங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக வலைத்தளங்கள் வெறும் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்ல பணம் ஈட்டும் இடமாகவும் மாறிவருகிறது. குறிப்பாக திரைப்படங்களில் நடித்து பிரபலமடைவதை விட சமூக வலைத்தளங்கள் மூலம் மத்தியில் பரீட்சையமான முகமாக மாறுவோர் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருக்கிறது.

அது போன்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் மும்பையை சேர்ந்த சந்தினி பாபத். 24 வயது வழக்கறிஞரான இவர் மெமிக்ரியில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம், யூடூப்பில் தமது மெமிக்ரி வீடீயோவை பதிவிட்டு பலரை கவர்ந்து வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது அலியாபட் போல இவர் மேமிக்ரி செய்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது.

இதே போன்று அனன்யா பாண்டே, கங்கனா ரணாவத் உள்ளிட்டோரின் குரலில் பேசி பலரை தமது ரசிகர்களாக்கி வைத்திருக்கிறார் சந்தினி பாபத் இவரது வளர்ச்சியை அடுத்து ஓடிடி தளத்தில் வெளியான நகைச்சுவை தொடரிலும் அவருக்கு நடிக வாய்ப்பு கிடைத்தது. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்து 73வாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். ஒவ்வொரு ரீலிஸ்சும் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ள குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடு முன்பு பாலிவுட் நடிகர் அக்க்ஷய்குமாருக்கு சொந்தமாக இருந்ததாம். சமூக வலைத்தளங்களின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அனைவரும் சர்வதேச சுற்றுலா, ஆடம்பர செலவுகள் செய்யும் நிலையில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதற்காக தமது ஆசைகளை கட்டுப்படுத்தி சிறுக சிறுக சேமித்து வைத்ததாக அவர் கூறியுள்ளார். மிக இளம் வயதில் பாலிவுட் நட்சத்திரங்கள் போல சந்தினி பாபத் பெரிய குடியிருப்பை வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post சமூக வலைதளத்தில் பிரபலமாகி கோடீஸ்வரியான 24வயது இளம்பெண்: நடிகர் அக்ஷய் குமாருக்கு சொந்தமான வீட்டை வாங்கி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Akshay Kumar ,MUMBAI ,Bollywood ,
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...