×

இங்கிலாந்தில் ஓரே கால்பந்தில் விளையாடிய பாரம்பரியப் போட்டி: பாரம்பரிய போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள்

இங்கிலாந்து: இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி நடைபெற்றது. ஆஷ்போர்ன் நகரப்பகுதியின் மையத்தில் ஏராளமானோர் கூடியிருக்க அவர்கள் மத்தியில் பந்து வீசப்பட்டதும் ஆட்டம் ஆரம்பமானது. போட்டி தொடங்கிய 8 மணி நேரம் கழித்து ஒருவர் கோல் அடித்தார் ஒரே பந்து என்ன முடியாத ஆட்டக்காரர்கள், 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்பந்தாட்டம் உலகிலேயே மிக பெரிய மிக நீளமான மற்றும் பழமையான போட்டியாகும்.

வீதி, புல்வெளி அதை தொடர்ந்து ஆற்று பகுதியென பந்து உதைபட, உதைபட போட்டி மேலும் மேலும் விறுவிறுப்படைந்தது. ஆற்றுக்கு அக்கறையை சேர்ந்தவர்களுக்கும் இக்கரையில் வசிப்பவர்களும் இரு அணிகளாக ஆடினர். போட்டியில் அதிக கோல் அடித்து வெற்றி பெறுபவருக்கு அந்த உதைபந்தே பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்தில் ஓரே கால்பந்தில் விளையாடிய பாரம்பரியப் போட்டி: பாரம்பரிய போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் appeared first on Dinakaran.

Tags : England ,Ashbourne ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது