×

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை வரையறை செய்ய சட்டத்திருத்தம்: பேரவையில் தாக்கல்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை வரையறை செய்வதற்கான சட்டம் முன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் உட்பிரிவுகளில் படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், அதன் தொடர்ச்சியாக இரண்டு முறை மீண்டும் நியமிக்கப்படுவதற்கு தகுதி உடையவர் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பதவிக்காலம் 6 ஆண்டுகளுக்கு வகுக்கலாம் என சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதோடு அவர் பதவி காலத்தில் 65 வயதினை நிறைவு செய்தால் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

இந்த நிலையில் தான் பல மாநிலங்களில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வரை எது முந்தையதோ அதுவரை பதவி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறையே தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் விதமாக 2011ம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையர் பதவியேற்ற காலத்தின் இருந்து 5 அல்லது 6 ஆண்டுகள் அல்லது 65 வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பதற்கும், நீட்டிப்புகான வகைமுறை எதுவும் இல்லாமல் இருக்கவும் வழிவகை செய்வதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அளித்திருந்த நிலையில் ஒன்றிய அரசின் ஊராட்சி அமைச்சகம் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இதனை சட்டமாக கொண்டு வருவதற்காக 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான சட்டம் முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவி ஏற்ற நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வரை எது முந்தையதோ அதுவரை பதவியில் இருத்தல் வேண்டும். அவர் மறுபணியமர்த்தத்திற்கு தகுதிவுடையவர் இல்லை என்றும் திருத்தம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை வரையறை செய்ய சட்டத்திருத்தம்: பேரவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu State Election Commissioner ,Tamil ,Nadu ,State Election ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...