×

கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு விவசாயிகளுக்கு இழைத்த அநீதிகளை பட்டியலிட்டார் காங்கிரஸ் தலைவர் கார்கே..!!

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு விவசாயிகளுக்கு இழைத்த அநீதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்டியலிட்டார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

*மோடியின் உத்தரவாதத்தை அவரது அரசே நிராகரித்தது.

*2015 இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலிருந்தும்….

*2016 இல் விவசாய அமைச்சகத்தின் RTI பதிலில் இருந்தும்….

*14 மாத விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகளுக்கு MSP சட்டத்திற்கான உத்தரவாதத்தை திரு மோடி அளித்தார். அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

*750 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர், ஆனால் மீண்டும் இந்த உத்தரவாதம் பொய்யானது.

*இதனால் கடந்த 4 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் உள்ளனர்.

*அவர்கள் மீது ரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர் புகை குண்டுகளையும், மோடி பொழிகிறார்.

*இன்று பீகாரில் நடைபெறும் அவுரங்காபாத் பேரணியில் இந்தப் பிரச்சினையை மீண்டும் எழுப்புவோம்.

*காங்கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்ட அந்தஸ்து வழங்குவோம்.

*பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் காங்கிரஸின் பங்களிப்புதான். காங்கிரஸ் இப்போது “கிசான் வருமானப் புரட்சி”யைக் கொண்டுவரும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு விவசாயிகளுக்கு இழைத்த அநீதிகளை பட்டியலிட்டார் காங்கிரஸ் தலைவர் கார்கே..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karke ,Modi government ,Delhi ,Mallikarjuna Gharke ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...