×

நாடாளுமன்ற தேர்தல்: பிப்.23ம் தேதி தமிழ்நாடு வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்

டெல்லி: பிப்.23ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்த ஆலோசனை நடத்த வரும் பிப்ரவரி 23ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னைக்கு வருகை தருகிறார். வரும் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மாற்றம் கேரளா ஆகிய மாநிலங்களுடைய தலைமை தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையான வாக்குச்சாவடி மையங்களின் தேவை மற்றும் மக்களவை தேர்தல் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பிரச்சனைகள் உள்ளதா என்பது தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் அன்றைய தினம் ஆலோசிக்க உள்ளது. எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஎன்பதை பற்றியும் ஆலோசனை நடத்த உள்ளார்.

தொலைதூர வாக்குசாவடிகளுக்கான ஏற்பாடுகள் அவர்களுக்கு தேவையான உதவிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்ற கருத்துக்களையும் அவர் ஆலோசனையில் முன்னெடுக்க உள்ளார். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் ஆணையர்கள் அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திக்கு 23ம் தேதி வருகை தருகிறார்.

The post நாடாளுமன்ற தேர்தல்: பிப்.23ம் தேதி தமிழ்நாடு வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Chief Election Commissioner ,India ,Rajiv Kumar ,Tamil Nadu ,Delhi ,Chief Election Commissioner of ,Chennai ,
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...