×

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ.சுகந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் , செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். காலியாக இருந்த அந்த பதவிக்கு தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை, கலால் வரித்துறை சிறப்பு செயலாளர் ஏ.சுகந்தி, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த துறை இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம். ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சி கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி, வர்த்தக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டார். வழிகாட்டி செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக செயல் இயக்குநர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) மாற்றப்பட்டுள்ளார். சென்னை வர்த்தக வரி, இணை ஆணையர் (உளவுத்துறை) வீர் பிரதாப் சிங், ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சி கூடுதல் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Sivdas Meena ,Chennai ,A. Sukanthi ,State Human Rights Commission ,Trichy Corporation ,Commissioner ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு;...