×

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாளை பாரத் பந்த் நடத்த வேண்டும்: காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பாரத் பந்த் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: இதுவரை விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றவில்லை. விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளாக விளைபொருளுக்கு வழங்கப்படுகிற குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பாதுகாப்பு, விவசாயிகளின் விளைபொருள் கொள்முதலில் கார்பரேட்டுகளை அனுமதிக்கக்கூடாது, பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம், மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத்தொகை என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதுகுறித்து மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. பாஜ அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன. இதை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற 77 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விவசாய அமைப்புகளோடு கலந்துபேசி அன்றைய தினம் அனைவரும் பச்சை துண்டை அணிந்து பாரத் பந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றி பெற செய்ய வேண்டும்.

The post தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிய பாஜ அரசை கண்டித்து நாளை பாரத் பந்த் நடத்த வேண்டும்: காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bharat Bandh ,Tamil Nadu ,Union BJP government ,KS Azhagiri ,Congress ,Chennai ,KS Alagiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...