×

என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினிவழியில் மே 11ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 5 வரை கால அவகாசம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,BSc ,National Corporation for Restaurant Management and Food Technology ,NCHMCD ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்