×

அமெரிக்காவில் கேரள தம்பதி 2 மகன்கள் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் சன் மேட்டியோவில் உள்ள என்பிசி பே பகுதியில் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் சுஜித் ஹென்றி. அவரது மனைவி அலீஸ் பிரியங்கா வசித்து வந்தனர். தம்பதியருக்கு 4வயதில் இரட்டையர்களான ஆண் குழந்தைகள் இருந்தனர். திங்களன்று நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் போலீசார் சென்று பார்த்த போது குளியலறையில் இருந்து தம்பதியரின் சடலத்தை மீட்டனர். மேலும் படுக்கையறையில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ம்பதியர் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

The post அமெரிக்காவில் கேரள தம்பதி 2 மகன்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Kerala ,US ,New York ,Anand Sujith Henry ,NBC ,Bay ,San Mateo, USA ,Alice Priyanka ,America ,
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்