×

காதலர்களை கவர்ந்த ‘பயர் கேக்’

காரைக்கால்: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் ரோஜா பூக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வது வழக்கம். இந்நிலையில் காரைக்காலில் உள்ள பேக்கரியில் புதிதாக பயர் கேக் தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தனர். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சாக்லேட், ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பல்வேறு ரகத்தில் இந்த பயர் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்துக்காக பலவிதமான கேக்குகளை தயார் விற்பனை செய்வோம். இந்தாண்டு புதுவிதமாக பயர் கேக் தயாரிக்கப்பட்டது. இந்த பயர் கேக்கில் காதலர் தின அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு வழங்கப்படும். கேக் மீது தீ வைத்தால் அவர்களது புகைப்படம் தெரியும். ஒரு வித கெமிக்கல் காரணமாக புகைப்படம் இடம் பெற்றுள்ள பகுதி மட்டும் 5 விநாடிகள் எரியும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த கேக் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்களது காதலிக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக பயர் கேக்கை இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

The post காதலர்களை கவர்ந்த ‘பயர் கேக்’ appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Valentine's Day ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...