×

கத்தாரில் 8 இந்தியர்கள் விடுதலை விவகாரம்; நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்பு இல்லை

மும்பை: கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அந்நாட்டிற்கு எதிராக உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய கடற்படை அலுவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை ஒன்றிய அரசோ, கத்தார் அதிகாரிகளோ பொது வெளியில் வெளியிடவில்லை. ஒன்றிய அரசின் தலையீட்டால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், 8 பேர் விடுதலை செய்யப்படுவதற்கு நடிகர் ஷாருக்கான் முக்கிய பங்காற்றியதாகவும், அவர்களின் விடுதலைக்கு ஷாருக் கானும் காரணம் என்றும் ஊகங்கள் எழுந்தன.

கத்தாரில் புகழ்பெற்று விளங்கும் ஷாருக் கான், அந்நாட்டு பிரதமர் முகமது பின் அப்துல் ரகுமானை சமீபத்தில் சந்தித்தார். இதன் காரணமாக அந்த ஊக செய்திகள் எழுந்தன. இதை மறுத்துள்ள ஷாருக் கான் அலுவலகம், 8 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசு அதிகாரிகள் மட்டுமே காரணம் என்று நேற்று தெரிவித்தது.

 

The post கத்தாரில் 8 இந்தியர்கள் விடுதலை விவகாரம்; நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்பு இல்லை appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,Indian Navy ,Qatar ,EU government ,
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...