×

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; தெ.ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னுக்கு ஆல்அவுட்

ஹாமில்டன்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வென்ற நிலையில், 2வது டெஸ்ட் ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று அந்த அணி 97.2 ஓவரில் 242 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ருவான் டி ஸ்வார்ட் ரன் அடித்தார்.

நியூசிலாந்து பவுலிங்கில் அறிமுக வீரர் வில்லியம் ஓ ரூர்க் 4, ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லதாம் 40, வில்லியம்சன் 43, ரச்சின் ரவீந்திரா 29, கான்வே 0, பிலிப்ஸ் 4 ரன்னில் அவுட் ஆகினர். 74 ஓவரில் நியூசிலாந்து 9விக்கெட் இழந்து 203 ரன் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது.

 

The post நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; தெ.ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னுக்கு ஆல்அவுட் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,South Africa ,Hamilton ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்