×

குமரியில் எத்தனை குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!!

மதுரை : குமரியில் எத்தனை குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியில் விதிகளை மீறி குவாரி இயங்குகின்றனவா? கனிமங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல குத்தகைதாரர்கள், உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், வரும் 21-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குவாரி பணிகளுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post குமரியில் எத்தனை குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,High Court Madurai ,Madurai ,High Court ,Western Ghats ,Kerala ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...