- ஆலந்தூர் மண்டல குழு
- என்.சந்திரன்
- இல்ல
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- ஆலந்தூர்
- டாக்டர்
- சி.மகேஷ்
- ஆலந்தூர் தெற்கு வட்டாரம்
- திமுக
- 12வது மண்டல குழு
- ஜனாதிபதி
- என்.என்.சந்திரன்-நிர்மலா சந்திரன்
- எஸ். ஷவானி
- ஏ. சேகர்-எஸ். பவானி
- முகப்பேர்
- வீட்டில்
- தின மலர்
ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளரும் ஆலந்தூர் 12வது மண்டல குழு தலைவருமான என்.என்.சந்திரன்-நிர்மலா சந்திரன் ஆகியோரின் மகன் டாக்டர் சி.மகேஷ், முகப்பேரை சேர்ந்த ஆ.சேகர்-சே.பவானி தம்பதியின் மகள் டாக்டர் எஸ்.ஷவானி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை 15ம்தேதி மாலை 6 மணிக்கு நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலை காந்திநகரில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. வரவேற்பு விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகிக்கிறார். விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
விழாவில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள். மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர், தொழிலதிபர்கள், வியாபார பெருமக்கள், நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். முடிவில், 167வது வார்டு கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் நன்றி கூறுகிறார்.
The post ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகிறார் appeared first on Dinakaran.