×

கேரளாவில் பரபரப்பு; மாணவி வயிற்றில் 2 கிலோ முடி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலக்காட்டை சேர்ந்த 15 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 2 கிலோ தலைமுடியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு கடந்த சில மாதமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நடத்தியதில் மாணவியின் வயிற்றுக்குள் ஒரு கட்டி போல உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அது கட்டி அல்ல தலைமுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானித்தனர்.

தலைமை மருத்துவர் ஷாஜகான் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மாணவியின் வயிற்றில் இருந்த முடியை அகற்றினர்.‘‘தனது 28 வருட பணியில் இதுபோல ஒரு அறுவை சிகிச்சை செய்ததில்லை’’ என்று டாக்டர் ஷாஜகான் தெரிவித்தார். மாணவிக்கு சிறு வயதில் இருந்தே முடியை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. மன அழுத்தம் உள்ள சில குழந்தைகளுக்கு ட்ரைக்கோ பிசயர் என்று அழைக்கப்படும் இந்த நோய் ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.பள்ளி மாணவி வயிற்றில் இருந்து ஆபரேஷன் மூலம் 2 கிலோ முடி எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

The post கேரளாவில் பரபரப்பு; மாணவி வயிற்றில் 2 கிலோ முடி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Palakati ,Gozhikode Government Medical College Hospital ,Kerala State ,Palakata ,
× RELATED நிபா காய்ச்சல் பீதி குறைந்தது தமிழக...