×

திண்டுக்கல் அருகே கடையில் நகைகளை திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது!!

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் உள்ள குமரப்பன் என்பவர் கடையில் நகைகளை திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ல் கடையில் இருந்த நகைகளை குமரப்பன் சரிபார்த்தபோது சுமார் 10 சவரன் நகை காணாமல் போனது. கடை ஊழியர்களிடம் குமரப்பன் விசாரித்தபோது காங்கேயன், வெங்கடேசன் முன்னுக்குபின் முரணாக கூறியதால் சந்தேகம் ஏற்பட்டது. குமரப்பன் அளித்த புகாரில் போலீஸ் நடத்திய விசாரணையில் காங்கேயன், வெங்கடேசன் நகை திருடியது அம்பலமானது. பணிபுரிந்த கடையிலேயே நகைகளை திருடிய ஊழியர்கள் காங்கேயன், வெங்கடேசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திண்டுக்கல் அருகே கடையில் நகைகளை திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kumarappan ,Nilakottai ,Savaran ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் லீக் கால்பந்து போட்டி