×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பார்வை மாற்று திறனாளிகள் சாலை மறியல்..!!

சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பார்வையற்ற மாற்று திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள ஒருங்கிணைந்த அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களில் 1 சதவீத இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்விலிருந்து விளக்கு அளிப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை பார்வை மாற்று திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிவரும் அவர்கள் இன்று கோடம்பாக்கத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்தது. தகவலறிந்து விரைந்த போலீசார் மாற்று திறனாளிகளிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர். சுமார் 1 மணி நேரம் நீடித்த போராட்டத்தால் கோடம்பாக்கம், அசோக் நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

The post 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பார்வை மாற்று திறனாளிகள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!