×

மேற்கு வங்கம் எல்லை வழியாக தங்கம் கடத்த முயன்ற வங்கதேச பெண் கைது

கொல்கத்தா: தங்கத்தை டெலிவரி செய்வதற்கு ரூ.6,000 பெற்றிருப்பதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெட்ராபோல் பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற வங்கதேச பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் பெயர் நஸ்னீன் நஹர் என்பதும், அவர் வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள கில்கான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. எல்லை அருகே வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் நபர்களிடம் வழக்கமான சோதனை நடைபெற்றபோது, நஸ்னீன் நஹர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து 466.5 கிராம் தங்கத்தை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒருவரிடம் தங்கத்தை ஒப்படைக்க இருந்ததாகவும், தங்கத்தை டெலிவரி செய்வதற்கு ரூ.6,000 பெற்றிருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக அந்த பெண்ணையும், கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

The post மேற்கு வங்கம் எல்லை வழியாக தங்கம் கடத்த முயன்ற வங்கதேச பெண் கைது appeared first on Dinakaran.

Tags : West Bengal border ,Kolkata ,Petrapol ,North 24 Parganas district ,West Bengal ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...