×

கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று , சென்னை கிண்டியில் உள்ள தொழில் ஆணையர் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தொழில் மைய மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியதாவது: கடந்த 2023-24ம் ஆண்டில் மொத்தம் 7444 பயனாளிகளுக்கு 275.88 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 819 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 21.67 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 4555 மனுக்கள் பெறப்பட்டு கடன் வழங்குவதற்காக வங்கிகளுக்கு 2577 விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அதிக பயனாளிகள் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.10 வகையான மானியத்திட்டங்களில் கையிருப்பில் உள்ள தொகையினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை சேகரித்து அதில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் , தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், தொழில் வணிகத் துறையின் கூடுதல் இயக்குநர் மருதப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்றுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,CHENNAI ,Micro, Small and Medium Enterprises Department ,Mo. ,Anparasan ,District ,Center ,Industrial Commissioner ,Office ,Guindy, Chennai ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...