×

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்

சென்னை: செல்வாக்கு மிக்கவராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் விலகினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார் என அமலாக்கத்துறை மனுவில் தெரிவித்துள்ளது. ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வலியுறுத்தி வருகின்றது. நீண்ட காலமாக சிறையில் உள்ளதாக செந்தில் பாலாஜி தான், விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற எதிரான தடைச் சட்ட வழக்கின் விசாரணையை துவங்க தயாராக இருக்கிறோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத்துறை மனு தாக்களில் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமலாக்கத்துறை பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Sendil Balaji ,Chennai ,Senthil Balaji ,ENFORCEMENT DEPARTMENT ,Ashokumar ,Sentil Balaji ,Dinakaran ,
× RELATED செந்தில்பாலாஜி மனு மீது இன்று உத்தரவு