×
Saravana Stores

முதலமைச்சரை சந்தித்த நிலையில் ஒரு நாள் அடையாள போராட்டத்தை திரும்ப பெற்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது ஜாக்டோ-ஜியோ அமைப்பு. வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post முதலமைச்சரை சந்தித்த நிலையில் ஒரு நாள் அடையாள போராட்டத்தை திரும்ப பெற்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jacto Jio ,CHENNAI ,M.K.Stalin ,Jacto-Jio ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை