×

ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது: உச்சநீதிமன்றம்

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது; அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Sterlite ,Supreme Court ,Delhi ,Court ,Dinakaran ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!