×

தமிழில் மத்திய ஆயுதப்படை ஆள் சேர்ப்பு தேர்வு : ஆளுநர் பாராட்டு

சென்னை : மத்திய ஆயுதப்படைகளுக்கான ஆள் சேர்ப்பை தமிழில் நடத்தும் முடிவு பாராட்டுக்குரியது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. இது நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வெழுதும் ஆர்வலர்களுக்கும் அவர்களின் கனவுகள் நனவாகவும் மத்திய ஆயுதப் படைகளில் அவர்களின் அதிக பங்களிப்பை உறுதிப்படுத்தவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும். இந்த முயற்சிக்காக மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இது தமிழ் மீதான அவரது அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது. இது ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உண்மையான உணர்வை மேலும் அதிகரிக்கும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழில் மத்திய ஆயுதப்படை ஆள் சேர்ப்பு தேர்வு : ஆளுநர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Governor RN ,Ravi ,Central Armed Forces ,Tamil ,central government ,
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்