×

சென்னையின் முதல் காமிக்–கான் திருவிழா; தயாராகும் இளசுகள்!

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் குழந்தைகள், மற்றும் இளைஞர்களிடம் பிரலமான காமிக்- கான் திருவிழா இந்தியாவில் மும்பை, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே இத்தனை நாட்களும் நடந்து வந்தன. இந்நிலையில் சென்னையில் முதன் முறையாக வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் பலதரப்பட்ட காமிக் கிரியேட்டர்கள், ஆர்டிஸ்ட்டுகள், காமிக் தொழிற்சாலையின் நிர்வாகிகள் என பலர் சென்னையில் நடக்கும் காமிக் –கான் நிகழ்விற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் காமிக் கான் இந்தியா நிகழ்வுகள் இதற்கு முன்னர் நடந்திருந்தாலும், சென்னையில் எப்போது என்கிற கேள்விக்கு பல வருடங்களாகவே பதில் இல்லாமல் இருந்துவந்தது. அதைப் போக்கும் வகையில் 2024ம் ஆண்டின் முதல் காமிக் கான் இந்தியா நிகழ்வை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்திலிருக்கும் சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) பிப்ரவரி 17,18 தேதிகளில் காமிக் கான் இந்தியா நிகழ்வு நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 14,15ம் தேதி ஐதராபாத்திலும்; நவம்பர் 18,19ம் தேதிகளில் பெங்களூரிலும் ; 8,9,10ம் தேதிகளில் டெல்லியிலும் காமிக் கான் இந்தியா நிகழ்வுகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இண்டஸ்வர்ஸ், ஹோலிகவ் என்டர்டெயின்மென்ட், ஆசிட் டோட், கார்பேஜ் பின், கார்ப்பரேட் காமிக்ஸ், புல்ஸ்ஐ பிரஸ், பாகர்மாக்ஸ், ஆர்ட் ஆஃப் சாவியோ, அபிஜீத் கினி மற்றும் இன்னும் பல பதிப்பகங்கள்/இந்திய கலைஞர்களுடன் இந்த நிகழ்வு காமிக்ஸை பெரிய அளவில் காட்சிப்படுத்த காத்திருக்கிறது. சர்வதேச கலைஞர்களான டான் பேரன்ட் மற்றும் ஜான் லேமன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக எப்போது அல்லாத அளவிற்கு காமிக்ஸ் புத்தகங்களின் விற்பனையகங்கள், காமிக்ஸ் சார்ந்த பொம்மைகள், ஆக்சசரிஸ் என அனைத்தும் ஓரிடத்தில் கிடக்கும். இதனுடன், அமர் சித்ரா கதா, கிரஞ்சிரோல், நருடோ தமிழ் வாய்ஸ்ஓவர் கலைஞர்கள் மற்றும் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச படைப்பாளிகளுடன் பேனல்கள் மற்றும் பிரத்யேக சந்திப்புகள், கூட்டங்கள், என அனைத்தும் நிகழவிருக்கிறது.

இது பற்றி காமிக் கான் இந்தியாவின் நிறுவனர் ஜதின் வர்மா பேசுகையில், “காமிக் கான் வெறும் காமிக்ஸ் திருவிழா மட்டுமல்ல, பார்வையாளர்களின் கதை, கற்பனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை காண்பிக்கவும், தங்களது திறமைகளை காட்சி படுத்தவும் நிகழும் ஒரு போட்டிக் களம். சென்னை நகரம் கலை மற்றும் படைப்பாற்றலின் மையமாக இருப்பதால், எங்கள் சிறப்பு கொண்டாட்டத்தை இங்கு ஆர்வமுள்ள மக்களுக்கு கொண்டுவருவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த விறுவிறுப்பான நகரத்தில் உள்ள அனைவருக்கும் புதிதான அனுபவத்துடன் இரண்டு நாட்கள் மிக அற்புதமான பொழுதுபோக்குத் திருவிழாவாக காமிக்-கான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கான டிக்கெட்டுகளும் தற்போது விறுவிறுப்பாக விற்று வருகின்றன. புக் மை ஷோ உள்ளிட்ட தளங்களில் காமிக் –கான் இந்தியா நிகழ்விற்கான டிக்கெட்டுகளைப் பெறலாம். மேலும் டிக்கெட்டுகளுடன் சர்ப்ரைஸ் காமிக்ஸ் அன்பளிப்புகளும் கூட காத்திருக்கின்றன.

The post சென்னையின் முதல் காமிக்–கான் திருவிழா; தயாராகும் இளசுகள்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Comic-Con ,America ,Europe ,Mumbai ,Bengaluru ,India ,getting ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!