×

மின்வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி பெரம்பலூரில் மின்ஊழியர்: மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,பிப்.14: மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், தமிழக அரசின் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத் தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கை களில் கருப்புக் கொடிஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய, கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, நேற்று (13ம் தேதி) காலை 9 மணிமுதல் 9:30 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியஅமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1பெண் உள்பட மின்ஊழியர் மத்திய அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப் பினர்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.

The post மின்வாரியத்தை மூன்றாக பிரிக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி பெரம்பலூரில் மின்ஊழியர்: மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu Electrical Employees Central Organization ,Electricity Board ,Central Organization of Tamil Nadu Electrical Employees ,Tamil Nadu Government ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி