×

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம் மொத்த இந்­தி­யா­வுக்­கும் விடி­யல் கிடைக்­கும் நாள் தூரத்­தில் இல்லை: திமுக நிர்வாகிகள் கூட்­டத்­தில் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம், மொத்த இந்தியாவுக்கு் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை என்று அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மக்­க­ள­வைத் தேர்­தலை முன்­னிட்டு திமுக சார்­பில் ‘உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல்-பாசி­சம் வீழட்­டும்! இந்­தியா வெல்­லட்­டும்’ என்ற தலைப்­பில் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­வா­ரி­யாக தேர்­தல் பிரசார பொதுக் கூட்­டங்­கள் வரும் 16, 17 மற்­றும் 18 ஆகிய தேதி­க­ளில் நடை­பெற உள்­ளன. இந்த பொதுக்­கூட்­டங்­களை மிகச்­சி­றப்­பாக நடத்­து­வது குறித்து நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஒருங்­கி­ணைப்பு குழு, அனைத்து மாவட்­ட செய­லா­ளர்­கள், மாவட்ட பொறுப்பு அமைச்­சர்­க­ளு­டன் காணொ­லிக் காட்சி வாயி­லாக ஆலோ­சனை நடத்­தி­யது.

இந்­தக் கூட்­டத்­தில் திமுக இளை­ஞர் அணி செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஒருங்­கி­ணைப்பு குழு உறுப்­பி­ன­ரு­மான அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேசி­ய­தா­வது: `உரி­மை­களை மீட்க, தலை­வ­ரின் குரல்’ என்ற முழக்­கத்­தோடு நாம் தேர்­தல் களத்­தைக் காண இருக்­கி­றோம். ஐந்து வரு­டத்­தில் மட்­டும் நாம் ஆறரை லட்­சம் கோடி ரூபாய் வரி கட்­டி­யி­ருக்­கி­றோம். ஆனால், ஒன்­றிய அரசு நம் தமிழ்­நாட்­டுக்­குத் திருப்­பிக் கொடுத்­தது எவ்­வ­ளவு என்று பார்த்­தால், வெறும் ஒன்­றரை லட்­சம் கோடி ரூபாய். இதை மக்­க­ளி­டம் எடுத்­து சென்று பேசுங்­கள். இதை ஒரு பேசு பொரு­ளாக்­குங்­கள். தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு ரூபாய் கொடுத்­தால், நமக்­கு திருப்பி ஒன்­றிய அரசு டெல்­லி­யில் இருந்து நமக்­குக் கொடுப்­பது வெறும் 29 பைசா. மக்­க­ளி­டம் தொடர்ந்து இதைப் பேசிக் கொண்டே இருங்­கள்.

எப்­போ­தும் நடப்­ப­து­போல் காலை­யில் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடி ஆரம்­பிப்­போம், நிகழ்ச்­சியை முடிக்­கும்­போது தேசிய கீதம் பாடு­வ­து­தான் வழக்­கம். அது ஆளுந­ருக்­கும் தெரி­யும். இருந்­தா­லும், இதை ஒரு பிரச்­சி­னை­யாக்­கி­னார். இதற்­கா­கத்­தான் ஆளு­நர் என்ற பத­வியே தேவை­யில்லை என்று, இளை­ஞர் அணி மாநாட்­டில் நாம் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னோம். இப்­படி எல்லா பக்­க­மும் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைத் தடுப்­ப­தற்கு ஒன்­றிய பாஜக அரசு முட்­டுக்­கட்டை போட்டு வரு­கி­றது. இதை­யெல்­லாம் மக்­க­ளி­டம் நாம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

பத்­தாண்டு காலம் பாஜக தமிழ்­நாட்­டைச் சீர­ழித்­தது என்­றால், நேர­டி­யாக அவர்­கள் வந்து செய்­ய­வில்லை. அதிமுகவின் உத­வி­யோ­டு­தான் எல்­லா­வற்­றை­யும் நமக்கு எதி­ரா­கச் செய்து முடித்­தார்­கள். இதை­யெல்­லாம்­ நாம் மக்­க­ளி­டம் எடுத்­துச் செல்­ல­வேண்­டும். தென் சென்னை, மத்­திய சென்னை, வட­சென்னை ஆகிய மூன்று தொகு­தி­க­ளுக்­கான மிகப்­பெ­ரிய, ஒரு பிர­மாண்­ட கூட்­டம் தலை­வ­ரின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடை­பெற இருக்­கி­றது. எனவே, இந்­தக் கூட்­டங்­க­ளையெல்­லாம் மிகப்­பெ­ரிய வெற்றி அடை­யச் செய்ய வேண்­டி­யது நம் கடமை. விடி­யலை நோக்கி தலை­வ­ரின் குர­லாக நாம் 2021ல் தமிழ்­நாடு எங்­கும் எதி­ரொ­லித்­தோம்.

தமிழ்­நாட்­டுக்­குப் புதிய விடி­யல் கிடைத்­தது. அதே­போல் இப்­போது உரி­மை­களை மீட்க தலை­வ­ரின் குர­லாக எதி­ரொ­லிப்­போம். ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கும் விடி­யல் கிடைக்­கும் நாள் தூரத்­தில் இல்லை. கலை­ஞர் நூற்­றாண்­டில் ‘பாசி­சம் வீழ்ந்­தது, இந்­தியா வென்­றது’ என்ற வர­லாற்­றைப் படைத்­தி­டு­வோம். இவ்வாறு அவர் பேசினார். முன்­ன­தாக திமுக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி வர­வேற்றார். முதன்­மைச் செய­லா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு தலை­மை­யுரை நிகழ்த்­தி­னார். அமைச்­சர் எ.வ.வேலு நன்றி கூறி­னார். பத்­தாண்டு காலம் பாஜ தமிழ்­நாட்­டைச் சீர­ழித்­தது என்­றால், நேர­டி­யாக அவர்­கள் வந்து செய்­ய­வில்லை. அதிமுகவின் உத­வி­யோ­டு­தான் எல்­லா­வற்­றை­யும் நமக்கு எதி­ரா­கச் செய்து முடித்­தார்­கள்.

The post உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம் மொத்த இந்­தி­யா­வுக்­கும் விடி­யல் கிடைக்­கும் நாள் தூரத்­தில் இல்லை: திமுக நிர்வாகிகள் கூட்­டத்­தில் அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Stalin ,Minister ,Udayanidhi Stalin ,DMK ,CHENNAI ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான...