×

17வது மக்களவையில் கேள்வியே கேட்காத 6 பாஜ எம்.பிக்கள்?

புதுடெல்லி: அரசு சாரா பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் என்ற அமைப்பு, 17வது மக்களவை குறித்த தனது ஆய்வறிக்கையை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “2019 மே மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், 2019 ஜூன் 17தொடங்கிய 17வது மக்களவையில் 274 அமர்வுகள் நடந்துள்ளன. 543 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் சட்டீஸ்கரின் காங்கேர் தொகுதி உறுப்பினர் மோகன் மாண்டவி, ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதி உறுப்பினர் பகீரத் சவுத்ரி ஆகியோர் ஒருநாள் கூட தவறாமல் அவைக்கு வந்து 100 சதவீத வருகையை பதிவு செய்து சிறப்பு பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேசம் ஹமீர்பூரை சேர்ந்த பாஜ உறுப்பினர் புஷ்பேந்திர சிங் பண்டேல் 1,194 விவாதங்களிலும், அந்தமான நிக்கோபார் தீவுகளை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் குல்தீப் ராய் சர்மா833, உ.பியின் பிஜ்னோர் தொகுதி பகுஜன் சமாஜ் உறுப்பினர் மலூக் நகர் 582 விவாதங்களிலும் பங்கேற்று தீவிரமாக உறுப்பினராக பணியாற்றி உள்ளனர். விவாதங்களில் பங்கேற்று கேள்வியே கேட்காத 6 பாஜ உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள், பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதி உறுப்பினரும், நடிகருமான சன்னி தியோல், அனந்த் குமார் ஹெக்ட(உத்தரகன்னடா), ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினகி(பிஜாப்பூர்), பி.என்.பச்சே கவுடா(சிக்கபல்லாபூர்), வி. ஸ்ரீனிவாச பிரசாத்(சாமராஜநகர்), பிரதான் பருவா(லக்கிம்பூர்). மேலும் உ.பி. கோசி தொகுதி பகுஜன் சமாஜ் உறுப்பினர் சிறையில் உள்ள அதுல் குமார் சிங், மேற்குவங்கம் அசன்சோல் தொகுதி உறுப்பினரான நடிகர் சத்ருகன் சின்கா, தம்லுக் தொகுதி உறுப்பினர் திபியேந்து அதிகாரி ஆகியோர் எந்த விவாதங்களிலும் பங்கேற்கவில்லை” என்று இடம்பெற்றுள்ளது.

The post 17வது மக்களவையில் கேள்வியே கேட்காத 6 பாஜ எம்.பிக்கள்? appeared first on Dinakaran.

Tags : 17th Lok ,Sabha ,New Delhi ,NGO PRS Legislative Research ,17th ,Lok ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அரசியல் தலைவர்களின் பெயர்...