×

டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ விசாரணையை மாநில அரசு 2 மாதங்களுக்கு முன் வாபஸ் பெற்றது. இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் உமேஷ் எம் அடிகா விசாரித்தனர். அப்போது, லோக் ஆயுக்தா தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் அரபட்டி, இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ள கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் லோக் ஆயுக்தா போலீஸ், சொத்து குவிப்பு வழக்கில் டி.கே.சிவகுமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

The post டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lokayukta ,DK Sivakumar ,Bengaluru ,CBI ,Karnataka ,Deputy Chief Minister ,DK Shivakumar ,K. Somesekhar ,Umesh M. Adika ,TK Shivakumar ,Dinakaran ,
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...