×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருத்தரங்கம்

 

விருதுநகர், பிப்.14: 4ஜி மற்றும் 5 ஜி சேவையை பி.எஸ்.என்.எல்க்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒன்றிய பாஜ அரசானது, பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்க்கு 4ஜி மற்றும் 5 ஜி சேவையை வழங்க மறுத்து வருகிறது. இதனை கண்டித்தும் 2017 ஜன.1 முதல் ஊதிய மாற்றமும், பென்சனில் மாற்றமும் செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பி.எஸ்.என்.எல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் புளுகாண்டி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலைவர் இளமாறன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். டிஎன்டிசிடபுள்யூ மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் துவக்கி வைத்து பேசினார். ஏஐபிடிபிஏ அகில இந்திய தலைவர் மோகன்தாஸ், பிஎஸ்என்எல்இயு மாநில பொருளாளர் அஸ்லம்பாட்ஷா, டிஎன்டிசிடபுள்யூ மாநில செயற்குழு உறுப்பினர் விமல் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் மாநில உதவித் தலைவர் சமுத்திரக்கனி, சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : BSNL Staff ,Virudhunagar ,BSNL ,Union BJP government ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...