×

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்

 

மதுரை, பிப்.14: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பழைய விளாங்குடி சாலை, மதுரை- திண்டுக்கல் சாலையிலிருந்து, விளாங்குடி மற்றும் பரவை ஆகிய பகுதிகளை இணைக்கும், இணைப்புச் சாலையாக உள்ளது. பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் கிடந்த, இச்சாலையை சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலையாக புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் துவங்கின.

மொத்தம், 450 மீட்டர் தூரத்திற்கு புதுப்பிக்கும் பணிகள் நடக்கும் நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மந்தமாக பணிகள் நடப்பதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் தூசி பறந்து சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு நிர்வாகிகள் சுமன், ராம்குமார், தத்தனேரி கார்த்திக் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சென்று, பழைய விளாங்குடி சாலையை ஒட்டியுள்ள, சிஏஎஸ் காலனி முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தெருக்கள், சகாய அன்னை தெரு உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்தனர். அங்குள்ள சாலை, கழிவுநீர் மற்றும் குடிநீர் வசதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மேலும், குறைந்த காலத்தில் தீர்வு காணகூடிய பிரச்னைகளை, உடனடியாக சரி செய்வதாகவும் தெரிவித்தனர். இந்த மறியலால் அரை மணி நேரத்திற்கும் மேல், மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சாலையை சீரமைக்கக்கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : MADURAI ,22ND WARD ,DINDUKAL ,VALANGUDI ,PARAVAI ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை