×

சிறப்பு கல்விக்கடன் முகாம்

 

செங்கல்பட்டு: கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 15ம் தேதி நடக்கவுள்ளதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 15ம் தேதி காலை 10.30 மணி முதல் 3 மணி வரை நடைபெவுள்ளது.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இனையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட் பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10, 12ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post சிறப்பு கல்விக்கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : Education Loan Camp ,Chengalpattu ,Collector ,Arunraj ,Special Education Loan Camp ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...