×

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரிகள் உட்பட 30 பேருக்கு குண்டாஸ்: மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரிகள் உட்பட 30 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் லுக்மேன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (எ) ஒத்தரூபா சுரேஷ்(27), வேப்பேரி பகுதியில் அடிதடி வழக்கில் தொடர்புடைய சர்மா(25), திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த அரிசிகடை ரமேஷ் (எ) ரமேஷ்(39), ஏழுகிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(32), விக்னேஷ்வரன்(31), சூளைமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் ப்ராமா(39), புழல் பகுதியில் குட்கா விற்பனை செய்து வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த சேக்கா அஞ்சிபாபு (எ) அஜூபாபு(55), போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்த வழக்கில் மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(54), அடிதடி வழக்கில் தொடர்புடைய புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிமாறன்(28), சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் காவூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(25), சிவகங்கை மாவட்டம் சோமந்தாமங்கலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி(45), மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரகுநாதன்(40), திருவிக நகர் பகுதியில் மோகன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (எ) ஒணாம் வினோத்(30), திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) லோகேஷ்(24), அவரது சகோதரர் நரேஷ்(23) என பல்வேறு வழக்கில் தொடர்புடைய 30 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

The post சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரிகள் உட்பட 30 பேருக்கு குண்டாஸ்: மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Guntas ,Municipal Police ,Suresh ,Nungambakkam ,Lukman ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...