×

அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நேரடி முகவர்கள் நியமனம்: தலைமை அதிகாரி அறிவிப்பு

தண்டையார்பேட்டை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நேரடி முகவர்களை ஈடுபடுத்த சென்னை பொது அஞ்சல் அலுவலக தலைமை அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை பொது அஞ்சலக தலைமை அதிகாரி சுவாதி மதுரிமா கூறியதாவது, அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கவும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு, புதிதாக நேரடி முகவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

அதில் புதிதாக பணியில் சேர்வதற்காக விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வி தகுதி மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும் ரூ.5000 பாதுகாப்பு வைப்புத் தொகை அவர்கள் பெயரில் வைத்திருக்க வேண்டும். நேரடி முகவர் வேண்டாம் என்று சென்றால் வட்டியுடன் வைப்புத் தொகை அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வளர்ச்சி அதிகாரி தொலைபேசி எண் 9042342391/044-25212549 தொடர்பு கொள்ளவும்.

The post அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நேரடி முகவர்கள் நியமனம்: தலைமை அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Chennai General Post Office ,Swathi Madhurima ,Barimuna Rajaji Road ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு