×

சமூக வலைதளங்களில் செயல்படும் 30 போலி கணக்குகளை வெளியிட்ட சிபிஎஸ்இ: தேர்வுகள் நடக்கும் நிலையில் திடீர் விழிப்புணர்வு

புதுடெல்லி: அடுத்தடுத்து தேர்வுகள் நடக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் செயல்படும் 30 போலி கணக்குகள் குறித்த விபரங்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் ெதாடங்கி சிலர் அவதூறு, போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்ைம குறித்த சந்தேகங்களும் எழுகின்றன.

இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் பெயரில் சமுக வலைத்தளத்தில் செயல்பட்டு வரும் சுமார் 30 போலி சமூக வலைதள ‘எக்ஸ்’ கணக்குகள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்த போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் வௌியாகி வருவதாக, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் சில முகவரிகளை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது.

மேலும் போலியான கணக்குகளை பின்தொடர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், சிபிஎஸ்இ தொடர்பான விஷயங்கள், நம்பகமான தகவல்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையான சமூக வலைதள பக்கமான @cbseindia29 என்ற தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் 10வது மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களும், மாணவர்களும், பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சமூக வலைதளங்களில் செயல்படும் 30 போலி கணக்குகளை வெளியிட்ட சிபிஎஸ்இ: தேர்வுகள் நடக்கும் நிலையில் திடீர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : CBSE ,NEW DELHI ,
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?